AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ரசிகருக்கு பதில் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

Vishwanath And Sons Movie First Single Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இதைய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு, ஜி.வி.பிரகாஷ் பதிலளித்துள்ளார்.

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ரசிகருக்கு பதில் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
சூர்யா, மமிதா பைஜூ மற்றும் ஜி.வி.பிரகாஷ், Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Jun 2026 19:58 PM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் உச்ச நடிகராக மிகவும் பிரபலமானவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா நடித்துவந்த புதிய திரைப்படம்தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath And Sons). இப்படத்தை சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் ஜி.வி.பிரகாஷிடம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல் எப்போது வெளியாகும் என கேள்வி கேட்டுள்ள நிலையில், அதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் இமையத்திற்கு மரியாதை.. புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய சசிகுமார்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார்:

எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் ஜி.வி.பிரகாஷிடம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட பாடல் குறித்து கேள்வி கேட்ட நிலையில் அதற்க்கு அவர், “அடுத்த சில நாட்களில்.. வெகு விரைவில் வரும்” என அவர் அதில் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 12 மணிநேரம் ஆண்.. 12 மணிநேரம் பெண்.. டபுள் டமாக்கவான டபுள் ஆக்குபென்சி படம் எப்படி இருக்கு?- விமர்சனங்கள் இதோ!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் தொடர்பான பதிவு:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படம் இன்னும் 2 மாதங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யாவும் மலையாளத்தில் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us