சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் நிச்சயமாக 300 கோடி வசூலை தாண்டும் – வைரலாகும் தயாரிப்பாளர் பேச்சு
Producer Dhanajayan talks about Vishwanath and Sons movie update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி தற்போது அவரை உச்ச நடிகராக கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருப்பு படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை பெற்றப் படம் என்ற பெருமையை அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயகுநராக உள்ள இவரது இயக்கத்தில் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஸ்வநாத் & சன்ஸ் படம் நிச்சயமாக 300 கோடி வசூலை தாண்டும்:
அதன்படி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நிச்சயம் 300 கோடி ரூபாய் வசூலை எட்டும். தெலுங்கு மாநிலங்களில் வெங்கி அட்லூரிக்கு நல்லதொரு தொடக்க வசூல் கிடைக்கும். அதேபோல், தமிழ்நாட்டில் சூர்யாவுக்குப் பெரிய அளவிலான தொடக்க வசூல் கிடைப்பது உறுதி. அவரது நட்சத்திர அந்தஸ்து அதற்குப் பெரிதும் உதவும். தலாபதி விஜய் அவர்களைப் போலவே, ஏற்கனவே 300 கோடி ரூபாய் வசூலித்த இரண்டு படங்களைக் கொடுத்துள்ள நிலையில், இனி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டும் ஒரு படத்தை வழங்க வேண்டிய எதிர்பார்ப்பு அவர் மீது இருக்கும்.
Also Read… இன்று மாலை விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VishwanathAndSons will surely do ₹300Cr. #VenkyAtluri has a big opening in the Telugu states. #Suriya has a guaranteed big opening in Tamil Nadu; his stardom 🌟 will work. After delivering 2 ₹300Cr films. He’s going to have the expectations to deliver a ₹500Cr+ movie, like… pic.twitter.com/N4FrMrj7YQ
— Movies Singapore (@MoviesSingapore) June 8, 2026
Also Read… ஜஸ்ட் காட் திங்க்ஸ்… ஓடிடியில் சூப்பர் ஹிட் அடிக்க வரும் கருப்பு – எங்கு எபோது பார்க்கலாம்