டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்
Suriya 48 Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகரகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யாவின் 48-வது படம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூலில் இதுவரை நடிகர் சூர்யாவின் படங்கள் எதுவும் வசூலிக்காத அளவிற்கு அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 15 நாட்களில் இந்தப் படம் ரூபாய் 300 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 47-வது படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




48-வது படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இதுவா?
இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 48-வது படத்திற்காக இயக்குநர் டிஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மருத்துவராக நடிக்க உள்ளதாவும் மேலும் இது மருத்துவர் திருவெங்கடம் வீரராகவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்று நாடகம் என்று கூறப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… திரையரங்குகளில் மாஸ் காட்டும் ப்ளாஸ்ட் படம் வசூலிலும் ப்ளாஸ்ட்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,#Suriya48 – #Suriya is set to star next in a film directed by #TJGnanavel. The project will be produced by #ZhagaramStudios.
According to reports, Suriya will be playing the role of a doctor in the film, which is said to be a biographical drama based on the life of… pic.twitter.com/TVRTJdGBS3
— Movie Tamil (@_MovieTamil) June 1, 2026
Also Read… Priyanka Mohan: கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா மோகன்! குவியும் வாழ்த்து!!