AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் மாஸ் காட்டும் ப்ளாஸ்ட் படம் வசூலிலும் ப்ளாஸ்ட்!

Arjuns Blast Movie Box Office Collection Update | தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ப்ளாஸ்ட். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் மாஸ் காட்டும் ப்ளாஸ்ட் படம் வசூலிலும் ப்ளாஸ்ட்!
ப்ளாஸ்ட் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2026 21:08 PM IST

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்கள் என்றால் அது அர்ஜுன் என்று கூறும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் அர்ஜுன் நடிப்பில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான ஜென்டில்மேன், முதல்வன், ஜெஹிந்த் என பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அர்ஜுன் அதிக அளவில் தேச பக்தி படங்களில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர் அர்ஜுன் தற்போது தமிழ் சினிமாவில் ப்ளாஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

அதன்படி நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்த இந்த ப்ளாஸ்ட் படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் அர்ஜுன் உடன் இணைந்து அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், அர்ஜுன் சிதம்பரம், திலீபன், பாலா ஹாசன், ஜான் கொக்கன், ரமேஷ் நாராயணன், பவன், விவேக் பிரசன்னா, எஸ்.ராஜபாண்டி, வினோத் சாகர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

திரையரங்குகளில் மாஸ் காட்டும் ப்ளாஸ்ட் படம் வசூலிலும் ப்ளாஸ்ட்:

மார்சியல் ஆர்ட்சை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 5 நாட்களில் ரூபாய் 25 கோடிகளுக்கு அதிகமாக உலக அளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

ப்ளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இந்த வீக்கெண்டில் ஓடிடியில் என்ன படம் பார்க்க பிளான் வச்சிருக்கீங்க?

Follow Us