AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த வீக்கெண்டில் ஓடிடியில் என்ன படம் பார்க்க பிளான் வச்சிருக்கீங்க?

This week OTT release update here | தென்னிந்திய சினிமாவில் வாரம் வாரம் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது போல ஓடிடியிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகி உள்ளது என்று தற்போது பார்க்கலாம்.

இந்த வீக்கெண்டில் ஓடிடியில் என்ன படம் பார்க்க பிளான் வச்சிருக்கீங்க?
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2026 22:38 PM IST

கர படம்: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். முன்னதாக போர் தொழில் என்ற படத்தை இயக்கி மக்களிடையே விக்னேஷ் ராஜா பிரபலமான காரணத்தால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

லீடர் படம்: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் இரண்டாவதாக வெளியான படம் லீடர். இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், அரந்தாங்கி நிஷா மற்றும் பாகுபலி பிரபாகர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… RJ Balaji: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை – பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

ஜெட்லீ படம்: பிரபல காமெடி நடிகராக தெலுங்கு சினிமாவில் வலம் வந்த நடிகர் சத்யா நாயகனாக தற்போது நடித்து உள்ள படம் ஜெட்லீ. இயக்குநர் ரித்தேஷ் ராணா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். நடிகர் சத்யா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ரியா சிங்க, அஜய் மற்றும் வெண்ணிலா கிஷோர், ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

சுகமானோ சுகமானு படம்: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள மேத்யூ தாமஸ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் சுகமானோ சுகமானு. இந்தப் படத்தை இயக்குநர் அருண்லால் ராமச்சந்திரன் இயக்கிய ஃபேண்டசி காமெடி ட்ராமா திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… H Vinoth: சினிமாவில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கும் எச்.வினோத்?

Follow Us