AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த சிறுவன் யாருனு தெரிகிறதா? பான் இந்திய பிரபல இசையமைப்பாளர் இவர்! அட இவர்தான்!

Music Director Childhood photo: இணையதளங்களில் சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதர பிரபலங்களின் சிறுவயது மற்றும் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த பிரபலம் தெரியுமா?. இவர் பிரபல இசையமைப்பாளர், அது யார் என பார்க்கலாம்.

இந்த சிறுவன் யாருனு தெரிகிறதா? பான் இந்திய பிரபல இசையமைப்பாளர் இவர்! அட இவர்தான்!
பிரபலத்தின் குழந்தைப் பருவ புகைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 May 2026 08:46 AM IST

சமுக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், சினிமா பிரபலங்கள் (Cinema celebrities) மற்றும் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும். அந்த வகையில் மேலே உள்ள போட்டோவில் உள்ள சிறுவன் எந்த பிரபலம்-னு தெரிகிறதா?. இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் (Music Director). தனுஷின் (Dhanush) திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்து, தற்போது ஷாருக்கான் (Shah Rukh Khan) போன்ற பான் இந்திய பிரபலங்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay), சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் போன்ற பல்வேறு நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் ஆரம்பத்தில் பிரபல நடிகையும், பாடகியான ஒருவரை காதலித்துவந்தார்.

பின் சில காரணங்களால் அவர்கள் இருவரின் காதலும் முடிவுக்குவந்தது. மேலும் தற்போது பிரபல கிரிக்கெட் அணியின் மேலாளரின் மகளை இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. இப்போது தெரிந்திருக்கும், இந்த சிறுவன் வேறுயாருமில்லை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்தான் (Anirudh Ravichander).

இதையும் படிங்க: அதிரடி திருப்பங்களுடன்.. மா இன்டி பங்காரம் திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – சமந்தா!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Piece Of Rock (@pieceofrockoffl)

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக இருந்துவருபவர் ராக்ஸ்டார் அனிருத். இவர் கடந்த 2012ம் ஆண்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே தென்னிந்தியாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். 3 படத்திலிருந்து வெளியான “ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடலை கொடுத்து பான் இந்திய முழுவதும் புகழப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து தனுஷின் நடிப்பில், தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தார்.

இதையும் படிங்க: நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி

இதற்கு பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் வெளியான கத்தி படத்திற்கு இசையமைத்து மாபெரும் இசையமைப்பாளராக உருவெடுத்தார். இவர் இசையமைத்த முதல் ஹை பட்ஜெட் படமாக கத்தி அமைந்தது. இதற்க்கு பின் சூர்யா, தனுஷ் மற்றும் அஜித் போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இந்தியில் அட்லீயின் இயக்கத்தில் வெளியான ஜவான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற சினிமாவில் இசையமைப்பாளராக புகழப்பட்டுவருகிறார் அனிருத்.

Follow Us