AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் உள்ள சிறுவன் யார் தெரியுமா? டோலிவுட்டின் உச்ச நாயகன் இவர்.. அட அவர்தான்!

Telugu Star Childhood Photo: சினிமாவில் சிறந்த நடிகர்கள் இருந்துவருகின்றனர், அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?. இவர் டோலிவுட் சினிமாவின் உச்ச பிரபலம். அவரை பற்றி விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் உள்ள சிறுவன் யார் தெரியுமா? டோலிவுட்டின் உச்ச நாயகன் இவர்.. அட அவர்தான்!
தெலுங்கு நடிகரின் சிறுவயது புகைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 May 2026 08:49 AM IST

தென்னிந்திய சினிமாவில் டோலிவுட் (Tollywood) முதல் கோலிவுட் சினிமா (Kollywood cinema) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்துவருகிறார்கள். இவர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும். அதுபோலவே, மேலே இருக்கும் போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரிகிறதா?. இவர் தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர் (Telugu Lead Actor) , இவர் தற்போதும் சினிமாவில் நாயகனாகவே நடிக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இவர் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் (S.S. Rajamouli) இயக்கத்தில் இரு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரு படங்களும் பான் இந்திய வெற்றியை பெற்றிருந்தது.

அந்த வகையில் இவரே முதல் இந்திய பான் நடிகராக, ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்த படத்தில் நடித்துள்ளாராம். இவ்வாறு சினிமாவிலும் பல சாதனைகளை இவர் செய்துள்ளார். தற்போது அனிமல் பட இயக்குநர் சந்திப்பு வாங்காவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அட இந்த நடிகர் வேறுயாருமில்லை தெலுங்கு நாயகன் பிரபாஸ்தான் (Prabhas).

இதையும் படிங்க: இயக்குநர் டூ நாயகன்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர்-னு தெரியுமா?

நடிகர் பிரபாஸின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Prabhas (@actorprabhas)

நடிகர் பிரபாஸ் சினிமாவில் கடந்துவந்த பாதைகள் :

நடிகர் பிரபாஸ் கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் ஜெயந்த் இயக்கத்தில் வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு அவரின் முதல் படமானது ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது . இதையடுத்து ராகவேந்தரா, வருஷம், அடவி ராமடு, பௌர்ணமி, யோகி போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆரம்பகாலத்தில் பிரபாஸ் குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதையடுத்து இவருக்கு பான் இந்தியா அளவிற்கு பிரபலத்தை கொடுத்த படம்தான் 2015ம் ஆனதில் வெளியான பாகுபலி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவிற்கும் பிரபலமானார்.

இதையும் படிங்க: எனக்கு அந்த பாலிவுட் நடிகை ரொம்ப பிடிக்கும்.. அவங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணனும்-னு ஆசை – கவின் ஓபன் டாக்!

இதையடுத்து பாகுபலி 2, சாகோ, ராதே ஷயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்தியாவிலே முதல் முதலில் ஒரே படத்தில் ரூ 1000ம் கோடிகள் வசூலித்திருந்தது, பிரபாஸின் பாகுபலி படத்திற்குத்தான். அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து பிரம்மாண்டமான படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தி ராஜா சாப் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற படத்திலும், சீதா ராமம் பட இயக்குநரின் ஃபௌசி என்ற படத்திலும் இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us