AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kavin: எனக்கு அந்த பாலிவுட் நடிகை ரொம்ப பிடிக்கும்.. அவங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணனும்-னு ஆசை – கவின் ஓபன் டாக்!

Kavins Favorite Actress: தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கவின் ராஜ். இவர் முன்னதில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தனக்கு பிடித்த பாலிவுட் நடிகை மற்றும் அந்த நடிகைக்கு ப்ரோபோஸ் பண்ண நினைத்ததாக பேசியுள்ளார். அது என விவரமாக பார்க்கலாம்.

Kavin: எனக்கு அந்த பாலிவுட் நடிகை ரொம்ப பிடிக்கும்.. அவங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணனும்-னு ஆசை – கவின் ஓபன் டாக்!
கவின் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 23 May 2026 08:14 AM IST

நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) தமிழ் சினிமாவில் (Tamil Cinema) இளம் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை குறைவான திரைப்படங்களே வெளியாகியுள்ளது. இவர் ஆரம்பத்தில் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த சரவணன் மீனாட்சி சீசன் 2 (Saravanan Meenatchi 2) நிகழ்ச்சியில், நடிகை ரட்சிதாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து சீரியல் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவ்வாறு சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே கவின் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் (Karthik Subburaj) இயக்கத்தில், விஜய் சேதுபதி (Vijay Sethupathy) நடித்திருந்த பீட்சா என்ற படத்தில் சிறிய வேடத்தில் கவின் நடித்திருந்தார்.

இதிலிருந்தே தனது சினிமா வாழ்க்கையையும் தொடங்கியிருந்தார். இவருக்கு வெற்றி படமாக டாடா, ஸ்டார் போன்ற திரைப்படங்கள் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கவின் தனக்கு பிடித்த நடிகை யார்?, அவரிடம் பப்ரோபோஸ் செய்ய நினைத்தது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜாவுடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு.. தனது புதிய படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!

தனக்கு பிடித்த நடிகை யார் என்பது குறித்து கவின் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் கவினிடம் யாரிடம், எந்த நடிகை உங்களுக்கு பிடிக்கும், அவர்களுக்கு ப்ரோபோஸ் செய்ய நினைத்ததுடா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த கவின், “இதெல்லாம் ரொம்ப போங்காட்டமாக இருக்கிறது. நான் ப்ரோபோஸ் பண்ணுவதற்கு ஒரு காலம் வரும் அப்போது பண்ணுகிறேன். எனக்கு பிடித்த ஹீரோயினுக்கு ப்ரோபோஸ் செய்யவேண்டுயமென்றால்?.

இதையும் படிங்க: கவினுக்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

எனக்கு பொதுவாகவே நடிகை ஷ்ரத்தா கபூரை ரொம்பவே பிடிக்கும். அவர்களுக்கு ப்ரோபோஸ் செய்தால்தான் அவர்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஒரு நடிகைக்கு ப்ரொபோஸ் செய்யவேண்டுமென்றால், ஷ்ரத்தா கபூருக்கு ப்ரோபோஸ் செய்வேன்” என அதில் கவின் வெளிப்படையாக பேசியிருந்தார்.

நடிகர் கவினின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)

நடிகர் கவின் தற்போது படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்துவருகிறார். நயன்தாராவிற்கு ஜோடியாக ஹாய் என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இதைடுத்து தண்டட்டி பட இயக்குநர் ராம் சங்கையா மற்றும் கென் ராய் இயக்கத்தில் படங்களில் இவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்கள் தொடர்ந்து, 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us