பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஃபகத் பாசில் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
Fahadh Faasil Salary Details Viral On Social Media | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள ஃபகத் பாசில் அடுத்ததாக் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்காஅக அவர் வாங்க உள்ள சம்பள விவரம் தற்போது வைர்லாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரேம் குமார். இவர் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மனதில் நங்கூரமாக பதிந்தார் இயக்குநர் பிரேம் குமார். காரணம் அந்தப் படம் பலரையும் தங்களது பள்ளி காலத்திற்கு கூட்டிச் சென்றது. மேலும் பால்ய காலத்தில் காதலித்த நினைவுகளை தூண்டும் வகையில் அந்தப் படம் இருந்ததால் பெரும் தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் பிரேம் குமார் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி வைத்து ஒரு படத்தை இயக்கி இருந்தார்.
மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடயே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடயேயும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரபலங்கள் பலர் தங்களுக்கு மிகவும் பிடித்த படங்களின் பட்டியளில் மெய்யழகன் படத்தை கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெறும் படங்களை இயக்கி வந்த இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக் மலையாள சினிமாவில் பிரபலமாக உள்ள பிரபல நடிகர் ஃபகத் பாசிலை வைத்து படம் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஃபகத் பாசில் உட்பட படக்குழுவினரின் சம்பள விவரம் வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிரேம் குமாரி படத்தில் ஃபகத் பாசில் சம்பளம் இவ்வளவா?
பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அதன்படி இந்தப் படத்தில் ஃபகத் பாசிலுக்கு 15 கோடி சம்பளம் என்றும் இயக்குநர் பிரேம் குமாரிக்கு 3 கோடிகள் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்திற்கு 2 கோடிகள் உட்பட மொத்தம் படத்தை 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.
Also Read… Meesaya Murukku 2: ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது ‘கோயிந்தம்மா’ பாடல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per VP, Reports are circulating about the budget and remuneration details of the upcoming film directed by Prem Kumar.
Fahadh Faasil in the lead role under Vels Film International,Govind Vasantha composing the music.
According to the reported figures being discussed are:…
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) May 22, 2026
Also Read… வசூலில் 200 கோடியை கடந்தது சூர்யாவின் கருப்பு படம் – உற்சாகத்தில் படக்குழு