வசூலில் 200 கோடியை கடந்தது சூர்யாவின் கருப்பு படம் – உற்சாகத்தில் படக்குழு
Suriyas Karuppu Film Box Office Collection | நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. அது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் இந்திரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த இந்திரன்ஸ் தான் கருப்பு படத்தின் முக்கிய கதாப்பாத்திரம். அவரை சுற்றியே கருப்பு படத்தின் கதை தொடங்குகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி நடராஜன், ஆர்.ஜே.பாலாஜி, ஷிவதா, ஸ்வாசிகா, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், வேலா ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன் மற்றும் தீபா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் வெளியானதில் இருந்தே உலக அளவில் ரசிகர்கள் கருப்பை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் படக்குழுவிற்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




வசூலில் 200 கோடியை கடந்தது சூர்யாவின் கருப்பு படம்:
நடிகர் சூர்யவின் நடிப்பில் கருப்பு படம் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி 7 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படம் இதுவரை எவ்வளவு வசூலித்து உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி கருப்பு படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 207 கோடிகள் வசூலித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதன் காரணமாகவும் கோடை விடுமுறை என்பதாலும் அடுத்து வரும் வாரத்தில் பெரியப் படம் எதுவும் வெளியாகாத காரணத்தாலும் வசூலில் இன்னும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The ONE @Suriya_offl‘s complete domination 💥#Karuppu grosses 207+ crores at the Worldwide Box Office!
Mega blockbuster, on the big screens now!
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar Musical.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers @dop_gkvishnu… pic.twitter.com/YszUDnsq53— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 21, 2026
Also Read… இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்