AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சில நேரங்களில் அன்பு என்பது இவ்வளவு மட்டுமே… விஜய் ஆண்டனியின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்

Vijay Antony Next Movie Title Is Viral On Social Media: தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படத்திற்கு அப்பா குட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சில நேரங்களில் அன்பு என்பது இவ்வளவு மட்டுமே… விஜய் ஆண்டனியின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்
அப்பா குட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 May 2026 18:33 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக படு பிசியாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து படங்களில் இசையமைப்பதில் இருந்து சற்று விலகி அதிக அளவில் படங்களில் நாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் நாயகனாக நடிக்க தேர்வு செய்யும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் நூறு சாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இந்த நூறு சாமி படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து நூறு சாமி படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக உள்ள அடுத்தப் படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மு.மாறன் எழுதி இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே மற்றும் பளாக்மெயில் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்:

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படத்திற்கு அப்பா குட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டைட்டில் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி முகத்தில் காயங்களுடன் ஒரு குழந்தையை தூக்கி வைத்துள்ளார். மேலும் இது அப்பா மகள் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக உள்ளது என்பது தெரிகிறது. மேலும் இந்த அப்பா குட்டி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்க உள்ளார். இவர்களுடன் இணைந்து பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்

Follow Us