AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karthi: ரவி ஷூட்டிங்கில் எப்போதுமே அப்டித்தான்.. கலகலப்பாக கார்த்தி சொன்ன விஷயம்!

Karthi About Ravi Mohans atrocities During Ponniyin Selvan shooting: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிலிருந்த நிலையில், அதில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கின்போது நடிகர் ரவிமோகன் செய்த அட்ராசிட்டி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Karthi: ரவி ஷூட்டிங்கில் எப்போதுமே அப்டித்தான்.. கலகலப்பாக கார்த்தி சொன்ன விஷயம்!
ரவி மோகன் மற்றும் கார்த்திImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 May 2026 08:36 AM IST

நடிகர் கார்த்தி (Karthi) தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் முதல் முதலில் வெளியாகியிருந்த திரைப்படம் வா வாத்தியார் (Vaa vaathiyaar) . எம்ஜிஆர்- ரசிகரின் கதையை மையமாக கூப்பிடு, ஒரு வித்தியாசமான கதையில் வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் நலன் குமாரசாமி (Nala Kumaraswamy) இயக்கியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவிலும் படம் நடிக்க கார்த்தி ஆர்வம் காட்டிவருகிறார். ஏற்கனவே நடிகர் நானி (Nani) நடித்திருந்த ஹிட் 3 (HIT 3) படத்தின் இறுதியில் கேமியோ வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் ஹிட் 4 படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கார்த்தி, பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) பட ஷூட்டிங்கின்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரவி மோகன் (Ravi Mohan) செய்த அட்ராசிட்டி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நகைச்சுவை மற்றும் ஆக்ஷன்… மா இன்டி பங்காரம் படம் இப்படிதான் இருக்கும் – சமந்தா!

பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கின்போது ரவி மோகன் செய்த விஷயம் பற்றி வெளிப்படையாக பேசிய கார்த்தி:

அந்த நேர்காணலில் கார்த்தி பேசுகையில், ” ரவி மோகனிடம் இருந்து எப்போது நகைச்சுவை வரும் என, நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. முகம் வெரப்பாக இருந்தாலும் காமெடி சூப்பரா பண்ணுவாரு. பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கின்போது, ஒருமுறை துருவ் விக்ரம் அங்கு வந்திருந்தார். அப்போது அவர், ரவி மோகனை பார்த்து, “ஹாய் பொன்னியின் செல்வன்” என கூப்பிட்டார். உடனே ரவி மோகன், “ஹாய் கென்னியின் செல்வன்” என காமேசடி பண்ணிட்டாரு என சொன்னார்.

இதையும் படிங்க: வாடிவாசல் படம் சூர்யாவின் கெரியரில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும்.. ஆனால் – மிஷ்கின் பேச்சு!

உடனே கூட இருந்த சியான் விக்ரம், அப்படித்தான் ஒருமுறை, விமானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது ரவி மோகன் என்னுடன் வந்தார். அப்போது ஒரு ஹீரோவை குறிப்பிட்டு, அவர் காதலித்தாலும் ஒரே ரியாக்ஷன்தான், அம்மா செத்தாலும் ஒரே ரியாக்ஷன்தான், எப்படி இப்படி இருக்கிறார்? என என்னிடம் சொன்னார். நான் உடனே அவரிடம், அந்த நடிகர் எனக்கு நண்பர்தான் என சொன்னவுடன். அதன் எப்படிப்பா இப்படி நல்லா நடிக்கிறார் என ரூட்டை மாற்றிவிட்டார்” என அதில் அவரும் நகைச்சுவையாக ரவி மோகனை பற்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

நடிகர் கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ரவி மோகனுக்கு ஒரு பிரச்னை என்றாலும், அவருக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும் முதலில் இருப்பவர் கார்த்திதான் என ரவி மோகன் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

Follow Us