Mysskin: வாடிவாசல் படம் சூர்யாவின் கெரியரில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும்.. ஆனால் – மிஷ்கின் பேச்சு!
Mysskin About Vaadivaasal Movie: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை கொடுக்கும் இயக்குநராகவும், சிறப்பான நடிகராகவும் இருந்துவருபவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசியிருந்தார். அதில் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் பற்றியும் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெற்றியை பற்றியும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இயக்குநர் மிஷ்கின் (Mysskin) தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் இருந்துவருகிறார். இவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் (Keerthy Suresh) சத்யவான் சாவித்ரி (Sathyavan Savithri) என்ற படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிராவின் எஸ் விஜாய் என்பவர் இயக்கிவருகிறார். இப்படமானது ஒரு நீதிமன்றத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், 2026ம் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் (Train) மற்றும் பிசாசு 2 (Pisaasu 2) போன்ற திரைப்படங்கள் தயாராகி இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படமானது சில பிரச்சனைகளின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அதில் விஜய் சேதுபதி நடித்திருந்த ட்ரெயின் படமானது, 2026ம் ஆண்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பேசிய அவர் சூர்யாவின் (Suriya) நடிப்பு, அவரின் வாடிவாசல் திரைப்படம் (Vaadivaasal) மற்றும் கருப்பு (Karuppu) படத்தின் வெற்றி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர்-யின் பர்த்டே.. டிராகன் பட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் குறித்து மிஷ்கின் தெரிவித்த விஷயம்:
அந்த நேர்காணலில் மிஷ்கின் பேசுகையில், “உண்மையை சொல்லப்போனால் வாடிவாசல் திரைப்படத்தின் கதையை முதலில் கேட்கும்போது ஷாக் ஆகிட்டேன். எவ்வளவு ஒரு அற்புதமான கதை. அந்த படமானது சூர்யாவின் கெரியரில் ஆல் டைம் ஹிட் படமாக இருக்கும் என நம்பினேன். ஆனால் அந்த படமானது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கருப்பு திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதில் சந்தோசம்.
இதையும் படிங்க: நகைச்சுவை மற்றும் ஆக்ஷன்… மா இன்டி பங்காரம் படம் இப்படிதான் இருக்கும் – சமந்தா!
சூர்யா மிகவும் அருமையான திறமையைக்கொண்ட நடிகர். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படங்கள் பின்னடைவாக அமைந்தது. அத்தியாயெல்லாம் கடந்து, சூர்யாவிற்கு இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
சூர்யா குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியிருந்தது தொடர்பான பதிவு:
Director #Mysskin in a Recent Interview ⭐:
• When Vetrimaaran narrated the story of Vaadivaasal to me, it was extraordinary..💥 I feel very bad about it. But when #Suriya won for #Karuppu, I felt very happy.. He’s an extraordinary actor.. He faced some setbacks recently..
— Laxmi Kanth (@iammoviebuff007) May 20, 2026
நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரிய ஹிட் கொடுத்திருந்த திரைப்படம் கிளறுப்பு. இதை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது 5 நாட்களில் தமிழகத்தில் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.