இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி யார்.. அட பிரபல தமிழ் நடிகையின் மகளாக இருந்து நடிகையானவர் இவர்!
Bollywood Actress childhood Photo: திரைப்பட ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?. இவரின் தாய் தமிழில் பிரபல நாயகியாக இருந்தவர். இந்த சிறுமி எந்த நடிகை என விவரமாக பார்க்கலாம்.
சினிமாவை பொறுத்தவரை பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குழந்தை பருவம் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் இணையத்திலும் அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகிவரும். அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இவரின் தாய் தமிழில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நாயகியாக (Tamil Actress) இருந்துவந்தவர். தனது தாய்க்கு பிறகு இவரும் சினிமாவில் கதாநாயகியாக படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ஆரம்பத்திலே பாலிவுட் சினிமாவில் (Bollywood) கதாநாயகியாக நடிக்க தொடங்கிய நிலையில், இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலே படங்கள் நடித்துள்ளார். இந்த இரண்டு மொழிகளில் நடித்திருந்தாலும் இவர் தமிழ் மக்களிடம் பிரபலமானவர்தான். இவர் முழுக்க இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்தாலும், தமிழ் மொழியும் இவருக்கு தெரியும்.
தற்போது இந்த நடிகையின் தாய் இல்லை. இவர் ராம் சரண் (Ram Charan), வருண் தவான் (Varun Dhawan) மற்றும் ஜூனியர் என்டிஆர் (Jr.NTR) போன்ற பிரபலங்களுடன் படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் தாயும் இறுதியாக தளபதி விஜயுடன் தமிழில் ஒரு படம் நடித்திருந்தார். அட இந்த சிறுமி வேறுயாருமில்லை, நடிகை ஸ்ரீதேவியின் மகளும் (Sridevi), நடிகையுமான ஜான்வி கபூர்தான் (Janvhi Kapoor).




இதையும் படிங்க: சிறப்பாக தொடங்கியது சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங் – படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!
நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை ஜான்வி கபூரின் சினிமா பயணம் :
நடிகை ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடாக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கோஷ்டி ஸ்டோரி, ரோஹி,குட் லக் ஜெரி, மிலி, தேவரா, ஹோம் பாண்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்றப்பட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் பெத்தி. இந்த படத்தில் இவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பயத்தில் அந்த படத்திற்கு முதலில் நோ சொல்லிட்டேன்.. ஆனால் மேஜிக் மாதிரி அது நடந்தது – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் விளையாட்டு சம்மந்தமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூர் “ஆச்சியம்மா” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்தடுத்த பாலிவுட் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்க ஆசைப்படும் நிலையில், இவருக்கு ஏற்ற தமிழ் படங்கள் அமையவில்லை என்று கூறலாம். ஐவரும் தமிழில் நடிக்க ஆசைப்படுவதாக முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.