தமிழில் ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு வரவேற்பு.. இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?
Malayalam Actresss childhood photo: மலையாளம் சினிமாவிலிருந்து தமிழில் பல நடிகைகள் கதாநாயகியாக நடித்துவருகிறார்கள். அந்த வகையில் ஒரே படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதின் பிரபலமானவர் இந்த நடிகை. இந்த போட்டோவில் இருக்கும் கியூட் சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. விவரமாக பார்க்கலாம்.
சினிமாவை பொறுத்தவரை பிரபலங்களின் சிறுவயது அடையாளமே தெரியாத புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகிவரும். அந்த வகையில் மேலே உள்ள போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இந்த நடிகை மலையாளம் சினிமாவை (Malayalam Cinema) சேர்ந்தவர். ஆரம்பகாலத்தில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தார். இவர் தமிழிலும் சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கொடுத்த படம் லப்பர் பந்து. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பிற்கு பிறகு, தனது அடுத்த படத்திலே நடிகர் சூர்யாவிற்கு (Suriya) அம்மாவாகவும் நடித்திருந்தார். மேலும் இவரை தெலுங்கு சினிமாவிலும் நடிகர் ராம் சரணுக்கு (Ram Charan) அம்மா வேடத்தில் நடிக்க அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வேடத்தை நிராகரித்துவிட்டாராம்.
தமிழிலும் சரி, மற்ற எந்த மொழிகளிலும் சரி ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் நடிக்கமாட்டேன் என சொன்னவர். மேலும் இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் சூர்யாவிற்கு அம்மாவாக படத்தில் நடித்த நிலையில், அவரின் கருப்பு (karuppu) படத்தில் நெகடிவ் வேடத்திலும் இந்த நடிகை நடித்துள்ளார். அட இந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை ஸ்வாசிகாதான் (Swasika).




இதையும் படிங்க: மமிதாவை நான் அடிச்சேனா.. அவர் எனது மகள் மாதிரி.. உண்மையை சொன்ன இயக்குநர் பாலா!
நடிகை ஸ்வாசிகாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை ஸ்வாசிகாவின் சினிமா பயணம் :
நடிகை ஸ்வாசிகா சினிமாவில் நடிகையாக தனது நடிப்பை தொடர்வதற்கு முன், தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்த நபர் என்ற நிலையில், மலையாளம் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் ஆரம்பத்தில் படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் தமிழிலும் ஆரம்பத்தில் நடிகையின் தோழி, சிறப்பு வேடங்கள் ஒன்றவற்றி நடித்திருக்கிறார். இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது 2009ம் ஆண்டில் வெளியான வைகை. மேலும் கோரிப்பாளையம் மற்றும் சாட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் சாட்டை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்து பிரபலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AA23 படம் லோகேஷின் ஒரு கனவுத் திட்டம்.. இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்த தகவல்!
இதையடுத்து தொடர்ந்து மலையாளம் படங்களிலும், அவ்வப்போது தமிழிலும் நடித்துவந்தார். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் இவருக்கு அங்கீகாரமாக அமைந்த படம் லப்பர் பந்து. 2024ல் வெளியான இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராகவும், சஞ்சனாவின் அம்மாவாகவும் நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து சூர்யாவின் ரெட்ரோ படத்தில் அவரின் வளர்ப்பு தயாராகவும் நடித்தார். மேலும் மாமன், கருப்பு போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.