AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் குயின்.. தற்போது ஒரு குழந்தைக்கு தாய்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?

Tamil Actress Childhood Photo: சமூக ஊடகங்களின் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் காஷ்மீரிய குழந்தையை போலவே, கியூட்டாக இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?. யார் இந்த நடிகை என விவரமாக பார்க்கலாம்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் குயின்.. தற்போது ஒரு குழந்தைக்கு தாய்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 03 May 2026 08:38 AM IST

தென்னிந்திய சினிமாவில் (South Indian Cinema) ரசிகர்கள் மத்தியில், சினிமா பிரபலங்களின் சிறுவயது அடையாளம் தெரியாத போட்டோக்கள் வைரலாகிவருவது வழக்கமே. அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் காஷ்மீரிய பெண் குழந்தையை போலவே, கியூட்டாக அமர்ந்திருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. இவர் கடந்த 2007ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலே, அப்போது ட்ரெண்டிங் நாயகனாக இருந்த கல்யாண் ராமுக்கு (Kalyan Ram) ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ராம் சரணுக்கு (Ram Charan) ஜோடியாகவும் படங்களில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு தமிழிலும் வரவேற்பை கொடுத்தது. அந்த வகையில் இவர் தமிழிலும் பேமஸான நிலையில், தனது முதல் படத்தில் நடிகர் பரத்திற்கு (Barath) ஜோடியாக நடித்தார். பின் விஜய் (Vijay), சூர்யா (Suriya), கார்த்தி போன்ற பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவ்வாறு தமிழில் தொடர்ந்து பிரபலமான நடிகர்களுடன் படங்களில் நடித்துவந்தார்.

ஆனால் இவருக்கு தற்போது படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இருந்தாலும், தனது முயற்சியை கைவிடாமல் தற்போது இந்தி மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அதிலும் தற்போது யாஷுக்கு (Yash) ஜோடியாகவும் படங்களில் நடித்துள்ளார். இந்த சிறுமி வேறுயாருமில்லை, சவுத் இந்தியாவின் சிறந்த நடிகை காஜல் அகர்வால்தான்.

இதையும் படிங்க: அதுதான் எனது ஆசை.. ஆனால் டைமே கிடைக்கவில்லை – அஜித் குமார் சொன்ன சுவாரஸ்ய விஷயம்!

நடிகை காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை காஜல் அகர்வாலின் சினிமா பயணம் :

நடிகை காஜல் அகர்வால், சினிமாவில் அறிமுகமாகுவதற்கு முன் மாடலாக விளம்பரங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் கடந்த 2007ம் ஆண்டில் லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில், நடிகர் கல்யாண ராமுக்கு ஜோடியாக நடித்து, கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர். அண்ட் வகையில் தென்னிந்தியாய் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் மகதீரா (மாவீரன்). எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்து புகளைப் பெற்றார். இதையடுத்து இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது பழனி. கடந்த 2008ம் ஆண்டில் இது வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: தனுஷ் படத்திற்கு முன்பு மாரி செல்வராஜ் அந்த ஹிட் படத்தின் பார்ட் 2 இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்

பின் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்தார். சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி மற்றும் ஜில்லா போன்ற படங்களிலும் நடித்து வரவேற்கப்பட்டார். பின் கடந்த 2020ம் ஆண்டில் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது இவர்களுக்கு நெளி என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போதும் சினிமாவை விடாமல் படங்களில் காஜல் நடிக்கிறார். இவர் இந்தியில் தி இந்தியா ஸ்டோரி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் ராமாயணா 1 மற்றும் 2ல் யாஷின் (ராவணனின் மனைவி) மனைவி மண்டோதரியாக காஜல் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us