AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kaalidas 2: கிரைம் திரில்லர் கதையில்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காளிதாஸ் 2 படம்? – விமர்சனங்கள் இதோ!

Kaalidas 2 Movie Reviews :தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பரத். இவரின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம்தான் காளிதாஸ் 2. இந்த படமானது இன்று (03/04/2026) திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Kaalidas 2: கிரைம் திரில்லர் கதையில்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா காளிதாஸ் 2 படம்? – விமர்சனங்கள் இதோ!
காளிதாஸ் 2 திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Apr 2026 16:50 PM IST

நடிகர் பரத் (Bharath) கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றிப்படங்கள் பல வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் 2018ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம்தான் காளிதாஸ் (Kaalidas). இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் (Sri Senthil) இயக்கியிருந்த நிலையில், அதிரடி க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இதன் அடுத்த பாகமாக தயார்க்கியுள்ள படம்தான் “காளிதாஸ் 2” (Kaalidas 2). இப்படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ள நிலையில், நடிகர் பரத்துடன் பவனி ஸ்ரீ (Bhavani Sre), அஜய் கார்த்தி, அபர்ணாதி (Abarnathi) மற்றும் நடிகை சங்கீதா (Sangeetha) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது இன்று 2026 ஏப்ரல் 3ம் தேதியோடு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்துடன் தொடர்ந்து புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!

காளிதாஸ் 2 படத்தின் கதை எப்படி இருக்கு :

இந்த காளிதாஸ் 2 படத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணாதி மற்றும் ஆனந்த் நாக் தம்பதியில், 4வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பரத் மற்றும் உதவி கமிஷனர் பவானி ஸ்ரீயின் தலைமையில் குழந்தை தேடப்படுகிறது. அந்த தேடலின்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வக்கீல் அஜய் கார்த்திக் மீது சந்தேகம் வருகிறது. அந்த தேடுதலின்போது பெண் குழந்தை சடலமாக கிடைக்கபெறுகிறது.

இதையும் படிங்க: பேமிலி ஆக்ஷன் கதையில்.. லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

இதையடுத்து வக்கீல் அஜய் கைது செய்யப்படுகிறார், மீண்டும் பிரகாஷ்ராஜின் மூலம் விடுதலை செய்யப்படுகிறார். வக்கீல் அஜய் கார்த்தியை குற்றவாளிக்காக நிரூபிக்க போலீஸ் போராடுகிறார்கள், அதே சமயத்தில் மீண்டும் அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அந்த விதத்தில் இவ்வாறு தொடர் மரணத்தின் பின்னணி என்ன ? குற்றவாளி யார்? என பரபரப்பான கிரைம் திரில்லர் கதையில் காளிதாஸ் 2 படத்தின் மீதி கதை உள்ளது.

காளிதாஸ் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

காளிதாஸ் 2 படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா? வேண்டாமா?

இந்த காளிதாஸ் 2 படத்தில் நடிகர் பரத் வழக்கத்திற்கும் அதிகமாக தனது நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்,, மேலும் இதில் நடிகை பவனி ஸ்ரீயின் கதாபாத்திரம் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்துள்ளது. மேலும் நடிகை சங்கீதா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். அந்த விதத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், இந்த படம் நிச்சயம் சுரஸ்யமாக இருக்கும். கிரைம் திரில்லர் படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் திரையரங்கு சென்று காளிதாஸ் 2 படத்தை பார்க்கலாம்.

Follow Us