AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!

Carmeni Selvam Movie X Review Here : நடிகர் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படத்தைப் பார்த்த மக்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளனர்.

மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!
கார்மேனி செல்வம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Apr 2026 14:07 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சமுத்திரகனி. இவர் தற்போது அதிக அளவில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தொடர்ந்து கதையின் நாயகனாகவும், சிறப்பு கதாப்பாத்திரத்திலும் வில்லனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமுத்திரகனி. அதன்படி தற்போது சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படத்தினை இயக்குநர் ராம் சக்கிரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரகனி உடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், மதுமிதா மற்றும் படவா கோபி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பாத்வே புரடெக்‌ஷன் கம்பெனி தயாரித்து உள்ளது.

மனைவி மற்றும் மகன் என சிறிய குடும்பத்தில் வாழ்ந்து வரும் கார் ட்ரைவர் சமுத்திரகனி வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற என்னத்தில் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். இறுதியில் அது வெற்றிப் பெற்றதா? அல்லது பிரச்சனையில் முடிந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தினை குறித்து ரசிகர்கள் வெளியிட்ட கருத்தை தற்போது பார்க்கலாம்.

கார்மேனி செல்வம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

‘கார்மேனி செல்வம்’ படத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைப் பற்றியது; இதில் இடம்பெறும் உணர்வுபூர்வமான காட்சிகள் மிகச் சிறப்பாகக் கைகூடியுள்ளன. சமுத்திரக்கனி தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, படத்தின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்; சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் கூட்டணி மிக அருமையாக அமைந்துள்ளது. ஒரு குடும்பத்திற்குப் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

கார்மேனி செல்வம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

மனதை நெகிழ வைக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான நாடகம். நடுத்தர வர்க்கத்தின் போராட்டங்கள், கனவுகள் மற்றும் தியாகங்களை, யதார்த்தமான கதைக்களத்துடன் இப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமுத்திரக்கனி தனது இயல்பான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வழங்க, கௌதம் மேனன் மேலும் மெருகூட்டுகிறார்.

Also Read… Durai Senthilkumar: அரசன் படம் சூப்பராக வந்துருக்கு – அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!

கார்மேனி செல்வம் படத்தின் எக்ஸ் விமர்சனம்:

கார்மேனி செல்வம் படம் மக்களின் மனங்களை வெல்ல ஒரு படம். அதுவும் குடும்பங்களைக் கவர ஒரு படம் காத்து இருக்கு மக்களே என்று விமர்சனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கார்மேனி செல்வம் படம் ஒரு உயிரோட்டமான கதை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுன் படம் குறித்து சூப்பர் அப்டேட்டை கொடுத்த ரத்னகுமார்

Follow Us