சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா – வைரலாகும் பதிவு
Nayanthara pairing with Salman Khan: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நாயகன்களுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்து வருகிறார். அதன்படி நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மன சங்கர வர பிரசாத் காரு. தெலுங்கு சினிமாவில் உருவாகி இருந்த இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தகது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகை நயன்தாரா அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா:
அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரப்லா இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வம்சி பைடிபைலி. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் வாரிசு படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள படத்தினை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிர்யேஷன்ஸ் சார்பக தயாரிபாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Also Read… ரன் படத்திற்கு லிங்குசாமி முதலில் சொன்ன நடிகர் அவர்தான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Queen Arrives 🔥
The epitome of versatility and excellence #NAYANTHARA joins #SalmanKhanVamshiPaidipallyFilm 💥💥
It’s an honour to have You on board for something truly special that’s underway 🙏🏻#SVC63 @BeingSalmanKhan @directorvamshi #DilRaju #Shirish @SVC_official… pic.twitter.com/sRtMdUBsBI
— Sri Venkateswara Creations (@SVC_official) March 31, 2026



