AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன? நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

Andrea talks about her upcoming movies viral on social media: தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள படங்கள் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன? நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்
ஆண்ட்ரியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Mar 2026 14:04 PM IST

தமிழ் சினிமாவில் பாடசியாக அறிமுகம் ஆகி பின்பு நாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது படங்கள். தொடர்ந்து நடிப்பு பாடல் என்று பிசியாக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் படங்கள் வெளியாகி வருகின்றது. மேலும் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும் இசை நிகழ்ச்சிகளிலும் நடிகை ஆண்டியா கலந்துகொண்டு பாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகன்களின் நாயகியாக மட்டும் இன்றி கதையின் நாயகியாவும் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அதன்படி இவர் கதையின் நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இது மட்டும் இன்றி தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்திலும் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இது குறித்து நடிகை ஆண்ட்ரியா பேட்டிகளில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல அண்டுகளுக்கு முன்பு நடிகை ஆண்ரியா நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள படங்கள் குறித்து விழா ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன?

நானும் பிசாசு 2 மற்றும் மனுஷி என அந்த இரண்டு படங்களுக்காகவும் காத்திருக்கிறேன். அவை எப்போது வெளியாகும் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த இரண்டு படங்களிலுமே தயாரிப்புத் தரப்பு சார்ந்த சிக்கல்கள் உள்ளன. யாராவது முன்வந்து அந்தப் படங்களைக் காப்பாற்ற வேண்டும். ஏனெனில், இரண்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன என்று நடிகை ஆண்டிரியா விழாவில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Ken Karunaas: யூத் பட வெற்றி.. கண்ணீர் மல்க கென்னை அரவணைத்த தாய் கிரேஸ் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நிறைவடைந்தது பேசில் ஜோசஃப் – எல்கே அக்‌ஷய் குமார் நடிப்பில் ராவடி படத்தின் ஷூட்டிங்!

Follow Us