நிறைவடைந்தது பேசில் ஜோசஃப் – எல்கே அக்ஷய் குமார் நடிப்பில் ராவடி படத்தின் ஷூட்டிங்!
Raawadi Movie Shooting Has Been Completed Now: நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் எல்கே அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் ராவடி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித் குமாரின் மகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் எ.கே அக்ஷய் குமார். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான சிறை படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நடித்தப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் சிறை படத்திற்கு பிறகு நடிகர் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் ராவடி.
இந்த ராவடி படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த ராவடி படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் எல்.கே.அக்ஷய் குமார் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், ஷாரிக் ஹாசன், நோபல் கே ஜேம்ஸ், ஐஸ்வர்யா சர்மா, அருணாசலேஸ்வரன் பா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.




ராவடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது:
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் செவன் ஸ்கிரீன் ஸூடியோஸ் சார்பாக இந்த ராவடி படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு கோடை விடுமுறையில் இருக்கும் என்றும் படக்குழு அந்த பதிவில் தெரிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ராவடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s a wrap for #Raawadi 💣 🔥
Summer 2026 🎬 @7screenstudio
Starring: @basiljoseph25 | @lk_akshaykumar | @JafferJiky | #NobleJames | @meshariqhassan7 @chaleswaran | #AishwaryaSharma@Vikjith @leonbrittodp @jenmartinmusic @barathvikraman @sherif_choreo @HariharanPS_… pic.twitter.com/LwyTL7zjtQ
— Seven Screen Studio (@7screenstudio) March 29, 2026
Also Read… என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாக இருந்தது ஹேப்பிராஜ் – மாரி செல்வராஜ்