AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரிஜினல் ஸ்டோரியில் உருவான ஒரு வெப் ஸ்டோரி… இந்தியில் வெளியான இந்த ஹெல்லோ பச்சோன் சீரிஸை கண்டிபா பாருங்க!

Hello Bachhon Web Series Review Here : உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இணையதள தொடர் ஹெல்லோ பச்சோன். இந்த இணையதள தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ஒரிஜினல் ஸ்டோரியில் உருவான ஒரு வெப் ஸ்டோரி… இந்தியில் வெளியான இந்த ஹெல்லோ பச்சோன் சீரிஸை கண்டிபா பாருங்க!
ஹெல்லோ பச்சோன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Mar 2026 19:57 PM IST

சினிமாவில் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களுக்கு மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. பொதுவாக மற்ற படங்கள் மற்றும் இணையதள தொடர்களைவிட உண்மை கதை என்று சொல்லும் போது ரசிகர்களுக்கு அதன் மீது ஆர்வம் அதிகமாக காணப்படுகின்றது. அந்த வகையில் சமீபத்தில் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ஹெல்லோ பச்சோன் என்ற இணையதள தொடர் குறித்து தற்போது பார்க்கலாம். அந்த தொடர் எப்படி இருக்கிறது என்றும் இந்த செய்தியில் பார்க்கலாம். ஹெல்லோ பச்சோன் என்றால் வணக்கம் குழந்தைகளே என்பது தமிழ் அர்த்தம் ஆகும். இந்தி மொழியில் உருவான இந்த இணையதள தொடரை தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஹெல்லோ பச்சோன் என்ற இணையதள தொடரில் நடிகர்கள் வினீத் குமார் சிங்,
விக்ரம் கோச்சார், கிரிஜா ஓக், அனுமேஹா ஜெயின், சித்ரன்ஷ் ராஜ், பங்கஜ் காஷ்யப், முதித் திவேதி, பிரசாந்த் சேத்தி, சதேந்திர சோனி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த தொடரை தி வைரல் ஃபீவர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் பிரதீஷ் மேத்தா இயக்கி உள்ள இந்த தொடருக்கு அபிஷேக் யாதவ், வெர்னாலி, அங்கித் யாதவ் மற்றும் சந்தீப் சிங் ராவத் இணைந்து திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெல்லோ பச்சோன் சீரிஸ் எப்படி இருக்கின்றது?

ஆன்லைனில் பிசிக்ஸ் வாலா என்ற யூடியூப் சேனல் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். மேலும் 12-ம் வகுப்பு மட்டுமே முடித்த அலக் பாண்டே (வினீத் குமார் சிங்) சின்னதா ஆரம்பித்த வகுப்பு பெரிய அளவில் மாறுகிறது. குறைந்த விலையில் மாணவர்களுக்கு கோச்சிங் எடுக்கும் பி டபுள்யூ என்ற அந்த சேனல் சாதாரண மக்களையும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவி செய்கிறது.

Also Read… Rashmika Mandanna: திருமணமாகி ஒரு மாதம் ஓவர்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!

இப்படி இருக்கும் சூழலில் இவரின் இந்த கோச்சிங் செண்டரால் பணத்தை மட்டுமே சம்பாதிக்க நினைக்கும் கோச்சிங் செண்டர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அந்த கார்பரேட் கோச்சிங் செண்டர்கள் பி டபுள்யூ கோச்சிங் செண்டரை முடித்துக்கட்ட பல முயற்சிகளை செய்கிறார்கள். அதனை அவர்கள் எப்படி சரிசெய்து தங்களது வேலையை செய்கிறார்கள் என்பதே இந்த தொடரின் கதை.

இந்த தொடர் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படி ஒரு பி டபுள்யூ கோச்சிங் செண்டரை வைத்து அலோக் என்பவர் பணம் கட்ட முடியாத பல ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்துள்ளார். அதனை மையமாக வைத்தே இந்த தொடர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Dhanush: Faces Of Kara.. தனுஷின் கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ வெளியீடு!

Follow Us