ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக சூரி வாங்கும் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்
Actor Soori's Salary For Next Movie Viral On Social Media: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி அவரது அடுத்தப் படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு சினிமாவில் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார். லைட் மேன் வேலையில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வந்த சூரி சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக படங்களில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தனது டைமிங் காமெடி சென்ஸ் காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். இவர் பிசியான காமெடி நடிகராக நடித்து வந்த போது ஒவ்வொரு படக்குழுவும் சூரியின் கால் ஷீட்டிற்காக காத்திருந்தனர். மேலும் பல நாயகன்கள் நடிகர் சூரி தான் தங்களது படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சூரி பிறகு படத்தின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூரி நடிக்க உள்ள புதுப் படத்திற்கு அவர் வாங்க உள்ள சம்பள விவரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புதியப் படத்திற்காக சூரி இத்தனை கோடிகள் சம்பளம் வாங்குகிறாரா?
நடிகர் சூரி நடிப்பில், ரவிகுமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தை தற்போது ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தொடக்கத்தில், இத்திட்டத்திற்கு ‘AGS என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூரி கோரியதாகக் கூறப்படும் அதிகப்படியான சம்பளத் தொகையின் காரணமாக, தயாரிப்புப் பொறுப்பு தற்போது ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்திற்கு மாறியுள்ளது.
சூரி சுமார் 25 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திரையுலகில் உள்ள இரண்டாம் நிலை (Tier-2) கதாநாயகர்களின் சம்பளத்திற்கு ஏறக்குறைய இணையான தொகையாகும். சம்பள விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய உயர்வு, ஒரு முன்னணி நடிகராக சூரியின் சந்தை மதிப்பு வளர்ந்து வருவதையே உணர்த்துகிறது.
Also Read… ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Soori’s Salary Sparks Industry Buzz…!
As per VP, actor Soori’s upcoming film, directed by Ravikumar, is now being produced by Mythri Movie Makers.
Initially, the project was expected to be backed by AGS Entertainment, but due to Soori’s reportedly high remuneration, the…
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) March 26, 2026
Also Read… Ramayana: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!



