AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramayana: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

Raanayana Movie special Update: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவியின் முன்னணி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் ராமாயணம். இன்று ஸ்ரீ ராம நவமி என்ற நிலையில், இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டள்ளது. அது குறித்த விவரமாக பார்க்கலாம்.

Ramayana: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!
ராமாயண திரைப்பட அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 27 Mar 2026 15:14 PM IST

உலகளவில் மிகவும் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் தயாராகிவரும் படம்தான் ராமாயணம் (Ramayana). இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் நிதிஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்க, சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல பொருட்செலவில் தயாராகிவருகிறதாம். இந்த படமானது 2 பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், முதல் பக்கத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீ ராமராக நடிகர் ரன்பீர் கபூரும் (Ranbir Kapoor) சீதையாக தமிழ் நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi) நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம், ராவணனாக நடிகர் யாஷ் (Yash) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரம்மாண்ட திரைக்கதையுடன், இந்து மதத்தின் காவியமான ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த திரைப்படமானது தயாராகியுள்ளது.

இன்று 2026 மார்ச் 27ம் தேதியில் ஸ்ரீ ராம நவமி என்ற நிலையில் (Sri Rama Navami), ராமாயணம் படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. என்னவென்றால் வரும் 2026 ஏப்ரல் 2ம் தேதியில், ராமாயணம் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வெளியாகுவதாக படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்

ராமாயணம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சாய் பல்லவி – ரன்பீர் கபூரின் ராமாயண படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ராமாயணம் திரைப்படமானது, இந்து கடவுளான ஸ்ரீ ராமரின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல பான் இந்திய பிரபலங்களும் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ராகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சன்னி தியோல் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 1000 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் பட ட்ரெய்லர்!

இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, 2026 ஏப்ரல் 2ம் தேதியில் ஹனுமான் ஜெயந்தியோடு வெளியாகும் நிலையில், அத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us