Ramayana Part 1 : ரன்பீர் கபூரின் – சாய் பல்லவி ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஓவர்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
Ramayana Movie Shooting Wrap Up : தென்னிந்திய சினிமாவை தொடர்ந்து சாய் பல்லவி நடித்துவரும் பாலிவுட் திரைப்படம்தான் ராமாயணம் பார்ட் 1. இப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதில் முதல் பாகத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari). இவரின் இயக்கத்தில் பான் இந்திய புராணக் கதை திரைப்படமாக உருவாகிவருவது ராமாயணம் (Ramayana). இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), யஷ் (Yash) நடித்துள்ளனர். மேலும் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக, நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராமாயணம் படமானது முழுக்க, இந்து புராண கதையான ராமாயணத்தை (Ramayana) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் ராமனாக (Raman) ரன்பீர் கபூரும், சீதையாக (Sitha) நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் யஷ் ராவணனாகவும் (Ravana), அவருக்கு ஜோடியாக மண்டோதரி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் (Kajal Aggarwal) நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படமானது 2 பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், அதன் முதல் பாகத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படக்குழு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




ராமாயணம் படப்பிடிப்பு நிறைவை கொண்டாடிய படக்குழு வீடியோ :
Ram and Lakshman during Ramayana wrap up #Ramayana #RanbirKapoor pic.twitter.com/ViXwAKlvqv
— RK (@Varun_RK88) July 1, 2025
நெகடிவ் ரோலில் நடிகர் யஷ்
கன்னட மொழியில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவிற்குப் பிரபலமானவர் நடிகர் யாஷ் இதை அடுத்ததாக அவர் கேஜிஎப் 2 படத்திலும் நடித்திருந்தார். இப்படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இதன் வெற்றியை அடுத்ததாக டாக்சிக் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். ராமாயணம் படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமாயணம் படத்தின் முதல் அறிமுக வீடியோ மற்றும் ரிலீஸ் :
இந்த ராமாயணம் திரைப்படமானது பான் இந்திய அனைத்து மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ளது இப்படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இந்த முதல் பாகமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாம்.
மேலும் இதன் இரண்டாவது பாகம் வரும் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வரும் 2025, ஜூலை 3ம் தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.