Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 BHK படத்தை பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டிய நடிகர் சிம்பு!

Actor Silambarasan TR: நடிகர் சிலம்பரசன் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள 3 BHK படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அதனை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

3 BHK படத்தை பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டிய நடிகர் சிம்பு!
நடிகர் சிம்புImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2025 20:07 PM

நடிகர் சிலமபரசன் (Actor Silambarasan) நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படத்தின் ட்ரெய்லர் மற்றும் படம் வெளியாவதற்கு முன்பு நடிகர்கள் படம் குறித்து பேசியது என பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது என்று விமர்சித்தனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு தற்போது அடுத்தடுத்து இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 49-வது படம், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 50-வது படம், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51-வது படம் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் இயக்குநர் வெற்றிமாறன் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 3 BHK படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் 3 BHK படம் குறித்து சிம்பு சொன்ன விசயம்:

3 BHK படத்தை தற்போதுதான் பார்த்தேன். ஒரு உணர்ச்சிபூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம் இது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த அன்புள்ள சித்தார்த் மற்றும் சரத்குமார் சார் அவர்களுக்கும் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மற்றும் முழு படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

3 BHK படம் குறித்து சிம்பு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள இந்த 3 BHK படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற மிடில் கிளாஸ் குடும்பங்களின் கனவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.