Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யாவின் கருப்பு படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் போஸ்ட்!

Karuppu Movie: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. சூர்யா 45 என்ற அழைக்கப்பட்ட இந்தப் படத்தின் தலைப்பு சமீபத்தில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது

சூர்யாவின் கருப்பு படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் போஸ்ட்!
கருப்புImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2025 19:05 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரெட்ரோ. ரோமாண்டிக் ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். ரெட்ரோ ஸ்டைலில் இருந்த நடிகர் சூர்யாவைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 45-வது படத்திற்காக நடிகர் சூர்யா இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார்.

சூர்யாவின் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கருப்பு படம்:

இந்தப் படத்திற்கு தற்போது கருப்பு என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா சூர்யாவின் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இறுதியாக 2005-ல் ஆறு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். அதன் பிறகு மன்மதன் அம்புவில் சூர்யா கேமியோ ரோலில் நடித்து இருந்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் இருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவதா, நட்டி சுப்ரமணியம் மற்றும் சுப்ரீத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:

கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவரக்ளுக்கும் படத்தின் டைட்டிலுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவின் பிறந்த நாள் அன்று கருப்பு படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யா தனது 50-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்று கருப்பு படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரிகின்றது. அதன்படி கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் ”திருவிழாவிற்கு தேதி குறிச்சாச்சு. கருப்பு படத்தின் திருவிழா மாதம் ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்து இருந்தனர்.

ரிலீஸ் தேதி குறித்து கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: