Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து காமெடிப் படங்களில் நாயகனாக நடித்து தற்போது கதையின் நாயகனாக பலப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ரசிகர்கள் தற்போது பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
மதராஸி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jul 2025 17:01 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவரது நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏ,ஆர்.முருகதாஸின் பிறந்த நாளில் இந்தப் படத்திற்காக இவர்கள் இருவரும் கூட்டணி வைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்றாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் சினிமாவில் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை எடுத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் அதிக நேரம் செலவிட்டதால மதராஸி படத்தை முடிக்க சற்று தாமதம் ஏற்பட்டது.

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு முழு நேரமாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் மதராஸி படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம்:

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல் , விக்ராந்த், பிரேம் குமார், சஞ்சய் மற்றும் சச்சனா நமிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி மதராஸி படத்தின் முதல் பாடல் அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மதராஸி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: