Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீங்க… மார்கன் படத்தை புகழ்ந்து தள்ளிய கார்த்திக் சுப்பராஜ்

Karthik Subbaraj Praised: கோலிவுட் சினிமாவில் ஒரு நல்ல படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அதனை திரையரங்குகளில் பார்த்துவிட்டு பாராட்டத் தவறியதில்லை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அந்த வகையில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான மார்கன் படத்தைப் பார்த்துவிட்டு அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீங்க… மார்கன் படத்தை புகழ்ந்து தள்ளிய கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Jul 2025 15:20 PM

நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என கோலிவுட் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி (Actor Vijay Antony). இவரது நடிப்பில் உருவான மார்கன் படம் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் (Director Leo Jhon Paul) இயக்கி இருந்தார். இது இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். முன்னதாக இவர் சினிமாவில் எடிட்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து சைக்கோ கொலைகாரர்கள் குறித்து க்ரைம் த்ரில்லர் படங்கள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கு. ஆனால் அதனை அந்த அந்த இயக்குநர் எவ்வளவு சுவாரஸ்யமாக கதையை மக்களிடம் கடத்திச் செல்கிறார் என்பதில் தான் அந்தப் படம் ஹிட்டா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து தான் பார்க்கும் சிறந்த படங்கள் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பாராட்டிப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தையும் பார்த்துவிட்டு புகழ்ந்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மார்கன் படத்தை தியேட்டரில் மிஸ்பண்ணிடாதீங்க:

அந்த எக்ஸ் தளப் பதிவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளதாவது, மார்கன் திரைப்படம் மிகவும் சிறப்பான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட ஒரு சீரியஸ் த்ரில்லர் படமாகும். இந்தப் படம் முதல் பிரேமில் இருந்து நம்மை ஈர்த்துவிடும். தயவுசெய்து இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் தவறவிடாதீர்கள். இயக்குனர் லியோ ஜான் பால் எனது முதல் படமான பீட்சாவின் எடிட்டர் அவர்களின் அற்புதமான அறிமுகம் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களின் அருமையான நடிப்பு. படம் வெற்றி பெற்றதற்கு முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

மார்கன் படத்தைப் பாராட்டி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் எக்ஸ் தள பதிவு: