புஷ்பா படத்திலிருந்து ஊ சொல்றியா பாடலை காப்பியடித்த பாடகி… தேவி ஸ்ரீ பிரசாத் காட்டம்!
Devi Sri Prasad: தெலுங்கு சினிமாவில் உருவாகி தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அது உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இயக்குநர் சுகுமாரன் (Director Sukumaran) எழுதி இயக்கி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun) நாயகனாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (Music Composer Devi Sri Prasad) இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதில் வரும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா ரூத் பிரபு அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ஊ அண்டவா என்றும் தமிழில் ஊ சொல்றியா என்று வெளியான அந்தப் ஐட்டம் பாடம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனாது.
இந்த நிலையில் இந்தப் பாடலை காப்பியடித்து பிரபல ஹாலிவுட் பாடகி பாடியதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வரவதாக தெரிவித்த தேவி ஸ்ரீ பிரசாத் உலக அளவில் பாடலின் ஈர்ப்பு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.




பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த ஊ சொல்றியா பாடல்:
தெலுங்கு சினிமாவில் ஊ அண்டவா என்று வெளியான இந்த ஐட்டம் பாடல் தமிழ் பதிப்பில் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா என்று வெளியானது. இந்தப் பாடலை தமிழ் பதிப்பில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நிலையில் ஒரு பார்ட்டியில் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுவார்.
படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு புஷ்பா படத்தில் இந்த ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடனம் ஆடியிருப்பார். இந்தப் பாடல் நடிகை சமந்தாவின் திருமண முறிவிற்குப் பிறகு வெளியானது என்பதால் பெரும் சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆனால் அதிகமாக இவர் பணியாற்றுவது என்னமோ தெலுங்கு சினிமாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram