Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிஎன்ஏ படத்தில் நடிகை நிமிஷாவின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன் – நடிகர் அதர்வா

Actor Atharvaa: நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பு குறித்து நடிகர் அதர்வா புகழ்ந்து பேசியது கவனம் பெற்று வருகின்றது.

டிஎன்ஏ படத்தில் நடிகை நிமிஷாவின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன் – நடிகர் அதர்வா
அதர்வா மற்றும் நிமிஷா சஜயன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2025 18:06 PM

கோலிவுட் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் தான் நடிகர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட் என இவர் எடுக்கும் எந்த ஜானரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறியதில்லை நடிகர் அதர்வா. இந்த நிலையில் நடிகர் அதர்வா நடிப்பில் கடந்த் 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டிஎன்ஏ. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், முகமது ஜீஷன் அய்யூப், ரமேஷ் திலக், சேத்தன், விஜி சந்திரசேகர், சுப்ரமணியம் சிவா, ரித்விகா மற்றும் கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். குழந்தை கடத்தலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டிஎன்ஏ படம் குறித்து நடிகர் அதர்வாவின் எக்ஸ் தள பதிவு:

நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பை பாராட்டிய நடிகர் அதர்வா:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் அதர்வா நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பு குறித்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். முன்னதாக படப்பிடிப்புத் தளத்தில் முதல் நாளிலேயே நடிகை நிமிஷா சஜயனுடன் நல்ல நட்பு கிடைத்துவிட்டது என்று தெரிவித்த அதர்வா மலையாள சினிமாவில் நடிகை நிமிஷா சஜயனின் ஹிட் படங்கள் பற்றி அவரிடம் பேசியதாக தெரிவித்தார்.

மேலும் சினிமா குறித்து கிரியேட்டிவான பல விசங்களை நிமிஷா சஜயனிடம் பேசியதாகவும் அவருக்கு சினிமாவில் பல விசயங்கள் கிரியேட்டிவாக பேசியதாகவும் நடிகர் அதர்வா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து டிஎன்ஏ படத்தில் நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பு குறித்து பாராட்டி பேசினார் அதர்வா.

அதர்வா பேசியதாவது, படப்பிடிப்பு தளத்தில் என்னையும் நிமிஷாவையும் அருகில் வைத்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கதையைக் கூறுவார். அப்போது நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்னால் எந்த ரீ டேக் வரக்கூடாது என்று. ஆனால் நிமிஷா நெல்சன் கதை கூறும் போது அவரது முகத்தை கூட பார்க்காமல் கீழே பார்த்துக்கொண்டே கதையைக் கேட்பார். சொல்லி முடித்ததும் எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு செல்வார்.

ஒரு சீன் எடுப்பதற்கு முன்பு எந்த ரிகர்சலும் நடிகை நிமிஷா எடுத்து நான் பார்த்ததே இல்லை. ஷாட் ரெடி என்று சொன்னது அங்க வந்து அவர் நடிப்பது தான், அதும் அவ்வளவு நேச்சுரளாக இருக்கும் அவரின் நடிப்பு என்று நடிகர் அதர்வா வெகுவாகப் பாராட்டி பேசியுள்ளார்.