எனது படத்தின் கதையை முதலில் அந்த நடிகரிடம் தான் கூறுவேன் – இயக்குநர் வெங்கி அட்லூரி
Director Venky Atluri: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தெலுங்கு மட்டும் இன்றி தற்போது பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். அதற்கு காரணம் இவரது இயக்கத்தில் இருதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம் தான்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri). இவர் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் அவரது 46-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அட்லூரி சூரியா 46 படம் குறித்து பல விசயங்களை பகிந்துள்ளார். படத்தின் கதை தொடர்பான பல தகவல்களையும் அந்தப் பேட்டியில் வெங்கி அட்லூரி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அந்தப் பேட்டியில் வெங்கி அட்லூரி தான் எழுதும் கதையை முதலில் அந்த நடிகரிடம் தான் கூறுவேன் என்று தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியதாவது, தான் எழுதும் கதைகளை முதலில் நடிகர் நாக சைத்தன்யாவிடம் தான் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏன் இன்னும் நாக சைத்தன்யா உடன் படம் பன்னவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் இருவரும் வெவ்வேறு ஷெடியூல்களில் பிசியகா இருக்கிறோம். விரைவில் கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.




சூர்யா 46 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The most anticipated #Suriya46 has been officially launched with a grand pooja ceremony! 🔥@Suriya_offl x #VenkyAtluri unite to create magic on screen! 💥💥
Thank you #Trivikram garu for gracing and marking the beginning of this journey with the first clap 🎬
🎬 Shoot begins… pic.twitter.com/is7MhRkVAF
— Sithara Entertainments (@SitharaEnts) May 19, 2025
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூரியா 46:
ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி உடனான கூட்டணி குறித்த அப்டேட்டை வெளியிட்டார். இதனை சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ஏன் என்றால் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி கூட்டணியில் வெளியாகும் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் படத்தின் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதில் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்க உள்ளது குறித்தும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.