Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனுடன் மோதும் துல்கர் சல்மான்… ஒரே நாளில் வெளியாகும் படங்கள்!

Sivakarthikeyan Movie Clash With Dulquer Salmaan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இந்தப் படத்துடன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் காந்தா படமும் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயனுடன் மோதும் துல்கர் சல்மான்… ஒரே நாளில் வெளியாகும் படங்கள்!
மதராஸி மற்றும் காந்தாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 30 Jun 2025 12:47 PM

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் அறிவிப்பு வெளியாகியும் படம் முடிவரைய இத்தனை நாட்கள் கடந்துவிட்டது. அதற்கு காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தை இயக்கி வந்ததுதான் காரணம். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகே ஏ.ஆர்.முருகதாஸ் முழு நேரத்தையும் மதராஸி படத்திற்கு அர்பணித்து பணிகளை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளாக மிகவும் பொறுமையாக நடைப்பெற்று வந்த மதராஸி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.  இந்த நிலையில் படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மதராஸி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன்மோதம் துல்கர் சல்மானின் காந்தா:

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படமும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ நடிக்கிறார். இவர் மிஸ்டர் பச்சன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா என பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படமும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் நேரடியாக மோத உள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே மாதிரி இந்த முறையும் இரண்டு படங்களுமே ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.