Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டில் இருந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகராக வலம் வருகிறார். ஆனால் 2018-ம் ஆண்டுக்கு பிறகே இவரது படங்கள் ஹிட் அடிக்கத் தொடங்கியது. அப்படி நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட்!
நடிகர் ஹரிஷ் கல்யாண்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 19:18 PM

பியார் பிரேமா காதல்: இயக்குநர் இளன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பியார் பிரேமா காதல்.  இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹரிஷ் கல்யாண் (Actor Harish Kalyan) நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ரைசா வில்சன் நாயகியாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பியார் ப்ரேமா காதல் படத்தின் ட்ரெய்லர் இதோ:

தாராள பிரபு: இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தாராள பிரபு. இந்தப் படத்தின் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்தார்.

இவருடன் இணைந்து நடிகர்கள் தன்யா ஹோப் மற்றும் விவேக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ஸ்பெர்ம் டோனராக இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தாராள பிரபு படத்தின் ட்ரெய்லர் இதோ:

பார்க்கிங்: இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பார்க்கிங். இந்தப் படம் இயக்குநர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனப் படம் ஆகும். இதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்தார்.

இவருடன் இணைந்து நடிகர்கள் இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு நபர்களுக்கு இடையே வரும் ஈகோ பிரச்னையால் என்ன எல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் கதை. இது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் இதோ: