Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025-ல் இதுவரை மலையாள சினிமாவில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ

Best Malayalam Movies List: தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்கள் தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவையும் ரசித்து வருவது வழக்கமாக உள்ளது. இதில் அதிகமாக தமிழ் ரசிகர்கள் மலையாள சினிமாவை கொண்ட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு வெளியாகி மலையாளத்தில் ஹிட் அடித்தப் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2025-ல் இதுவரை மலையாள சினிமாவில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 17:59 PM

L2 எம்புரான்: 2019-ம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் லூசிஃபர். நடிக்ர் மோகன்லால் நாயகனாக நடித்த இந்தப் படம் திரையரக்குகளில் வெளியாகு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது L2 எம்புரான். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், பிருத்விராஜ் சுகுமாரன், சாய்குமார் இவர்களுடன் இணைந்து இரண்டாம் பாகத்தில் புதிதாக அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது வலதுசார் கட்சியினர் சிலரால் படம் வன்முறைய தூண்டும் விதமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்துகள் எதுவும் படத்தின் வசூலிலும் விமர்சனத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

L2 எம்புரான் படத்தின் ட்ரெய்லர் இதோ:

ஆலப்புழா ஜிம்கானா: இயக்குநர் காலித் ரகுமான் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஆலப்புழா ஜிம்கானா. நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகர்கள் லுக்மான் அவரன், கணபதி எஸ்.பொடுவால், சந்தீப் பிரதீப், அனகா ரவி, பிராங்கோ பிரான்சிஸ், பேபி ஜீன் மற்றும் சிவ ஹரிஹரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

பள்ளியில் பெயில் ஆன இளைஞர்கள் கல்லூரியில் சேர விளையாட்டை தேர்வு செய்கின்றனர். அதில் அவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் மான் கராத்தே மாதிரி இருக்கும் என்று ட்ரெய்லர் வெளியான போது கூறியவர்கள் அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்துவிட்டு இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று கொண்டாடித் தீர்த்தனர்.

ஆலப்புழா ஜிம்கானா படத்தின் ட்ரெய்லர் இதோ:

நரிவேட்ட: நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் நரிவேட்ட. இந்தப் படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கி இருந்தார். மலைவாழ் மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் அரசை எதிர்த்து அவர்கள் போராடிய ஒரு உண்மை கதையை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனகா நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமுடு, ஆர்யா சலிம் மற்றும் சேரன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகர் சேரன் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரிவேட்ட படத்தின் ட்ரெய்லர் இதோ: