Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிப்பில் வெளியானது ஓஹோ எந்தன் பேபி படத்தின் ட்ரெய்லர்!

Oho Enthan Baby Movie Official Trailer | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது தம்பி ருத்ரா தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிப்பில் வெளியானது ஓஹோ எந்தன் பேபி படத்தின் ட்ரெய்லர்!
ஓஹோ எந்தன் பேபிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2025 14:43 PM

சினிமாவில் வாரிசுகள் அடுத்தடுத்து வரிசையாக வருவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது விஷ்ணு விஷாலின் (Actor Vishnu Vishal) குடும்பத்தில் இருந்து அடுத்ததாக அவரது தம்பி நாயகனாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படத்தின் மூலம் நாயகனாக விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா (Actor Ruthra) தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். படத்தின் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஓஹோ எந்தன் பேபி படம் வருகின்ற ஜூலை மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வீடியோவைப் படக்குழு இன்று 29-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் அன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் ருத்ரா உடன் இணைந்து நடிகை மிதிலா பால்கர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, நிவாஷினி கிருஷ்ணன், அருண் குரியன், விஜயசாரதி, கஸ்தூரி, வைபவி டான்டில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள்னர்.

ஓஹோ எந்தன் பேபி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு:

மேலும் நடிகர் விஷ்ணு விஷால் ஓஹோ எந்தன் பேபி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் உடன் இணைந்து தயாரிப்பாளர்கள் ஜாவித் மற்றும் கேவி துறை இணைந்து தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக இளைஞர்கள் கொண்டாடும் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக படத்தில் கிளிம்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.