Tamil Nadu News Live: அர்னாப் புயல்.. தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு எப்படி?
Tamil Nadu Latest News Live Updates in Tamil : அர்னாப் புயல் தமிழத்தை விட்டு நகர்ந்து ஆந்திரா நோக்கி செல்வதால் தமிழகத்தில் தீவிர கனமழைக்கான எச்சரிக்கை இல்லை. இன்றைய தினத்தை பொறுத்தவரை, லேசானது முதல் மிதமான மழை இருக்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
Weather Update : அக்.29 மற்றும் 30 வானிலை நிலவரம்
அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
-
Tamil Nadu Rains: தமிழ்நாட்டில் வானிலை எப்படி?
நாளை (அக்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், இதர தமிழகத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
-
Cyclone Arnab : அர்னாப் புயல் எங்குள்ளது?
சமீபத்திய தகவல்களின்படி, இந்தப் புயல் தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 540 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 620 கிலோமீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிலிருந்து 790 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தப் புயல் அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் கடுமையான புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 28-ஆம் தேதி காலையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கடற்கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115-125 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்றும், சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை எட்டக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தீவிர கனமழைக்கான வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று (அக்.27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Published On - Oct 27,2026 6:52 AM