AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Forecast: மிக தீவிர புயலாக மாறும் ‘அர்னாப்’.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எப்படி?.. வானிலை மையம் ரிப்போர்ட்

Weather Today: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள அர்னாப் புயல் நேற்றிரவு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறிய நிலையில், இன்று இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather Forecast: மிக தீவிர புயலாக மாறும் ‘அர்னாப்’.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எப்படி?.. வானிலை மையம் ரிப்போர்ட்
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Oct 2026 06:25 AM IST

சென்னை, அக்.27: தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை தெற்கு கேரளா வழியாக சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை காணலாம்.

இதையும் படிக்க: தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

அர்னாப் புயல் தீவிரம்:

வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘அர்னாப் புயலாக’ வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது. தொடர்ந்து நேற்றிரவு இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறிய நிலையில், இன்று இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (அக்.27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் நாட்களில் மழை வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (அக்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், இதர தமிழகத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தொடர்ந்து, அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், அக்.31ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

இதையும் படிக்க: தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது; அக்.31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்..

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us