Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மழைக்காலம் - Monsoon

மழைக்காலம் - Monsoon

இந்தியாவில், பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு காற்றினால் ஏற்படும் கனமழையைக் குறிக்கிறது. இந்தக் காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் பெரும்பகுதி முழுவதும் மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. பருவமழை இந்தியாவின் விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது பயிர்களுக்கு தண்ணீரை வழங்குகிறது. அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும் பருவமழைகள் இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள கோடை பருவமழைகள் ஆகும். கடலில் உள்ள சூடான நீர் ஆவியாகி காற்றில் உயர்கிறது. இது காற்றின் திசையை மாற்றி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஈரப்பதத்தை நிலத்தை நோக்கிப் பாயச் செய்கிறது. சூடான, ஈரப்பதமான காற்று மேகத்தின் மீது போதும்போது மழையை உருவாக்குகிறது. இதன் விளைவாக பல மாதங்கள் கனமழை நீடிக்கும். மழைக்காலத்தில் ஏற்படும் பருவ மாற்றத்தால் சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இது தொடர்பான பாதுகாப்பு விவரங்களும் இங்கே விவரிக்கப்படுகின்றன.

Read More

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கணிப்பு!!

தித்வா புயலைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களுக்கு மழை இருக்கும் எனவும், டிசம்பர் 08 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுக்கும் என வானிலை மையம் முன்னறிவித்திருந்தது. அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வெளுக்கும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, இன்று அது மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்தனர்.

Monsoon Skincare: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!

Skin Care for Rainy Season: மழைக்காலம் பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதன்படி அரிப்பு, எரிச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, மழைக்காலத்தில் உங்கள் சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். அதன்படி, சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Monsoon Safety: பாடாய்படுத்தும் குளிர்! இரவு முழுவதும் ஹீட்டர் ஓடுகிறதா? ஆபத்து அதிகம்!

Room Heater Using Tips: இரவு முழுவதும் ஹீட்டர் இயங்கும் போது, ​​அறை வெப்பநிலை தொடர்ந்து உயரும். இதனால் காற்று அதன் இயற்கையான புத்துணர்ச்சியை இழந்து காற்று கனமாகிறது. அறையில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசம் மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதனால்தான் பலர் காலையில் தலைசுற்றல், மயக்கம், பலவீனம் அல்லது தலைவலியை சந்திக்கிறார்கள்.

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். நீல​கிரி, ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த தித்வா, ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததால், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது.

Monsoon Health Tips: மழைக்காலத்தில் அடிக்கடி உடல்நல கோளாறு? உங்களை கவனித்து கொள்வது எப்படி?

Monsoon Infections: கனமழை மற்றும் நீர் தேங்குவது கொசுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்களின் இனப்பெருக்க இடங்களாக மாறும். இது மலேரியா, காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்களைத் தவிர்க்கவும், மழைக்காலத்தில் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதும் எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு

Rain Relief Aid : வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு உடனடியாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 85,500 ஹெக்டேர்கள் வரை பயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

குடையுடன் போங்க மக்களே..! சென்னை திருவள்ளூரில் கனமழை தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..

Chennai Rain: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் கடந்த 24 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மெல்ல மெல்ல வட திசையில் நகரும்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாமல் பெய்யும் மழை.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதாவது டிசம்பர் 2 2025 தேதி ஆன நாளை சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்த உத்தரவிட்டுள்ளார்.  

Monsoon Skincare Tips: மழைக்காலத்தில் இந்த தவறுகள் வேண்டாம்.. முகத்தில் பளபளப்பு போகும்!

Monsoon Skincare Mistakes: மழைக்காலத்தில் பருக்கள், ஒவ்வாமை, பூஞ்சை தொற்று மற்றும் தடிப்புகள் ஏற்படலாம். பலரும் கோடைக்காலத்திற்கும், மழைக்காலத்திற்கு ஒரே மாதிரியான சரும பராமரிப்பை மேற்கொள்கின்றனர். மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை (Skin Care) பராமரிக்க, மழைக்காலத்தின்போது சில ஸ்கின் கேர் முறையை பின்பற்ற வேண்டும்.

புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Tamil Nadu Rain Alert: பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில், “புயல் வலுவிழந்தாலும் மேகக் கூட்டங்கள் அதே பகுதியில் இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கும். டிட்வா புயலின் காரணமாக சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை அடுத்த இரண்டு நாட்களில் பூர்த்தி அடையும் என தெரிவித்துள்ளார்.