‘வாட்டி வதைக்கும் குளிர்’.. காலையிலேயே இப்படியா!!.. அடுத்த 4 நாட்களுக்கு இப்படிதான்!!
IMD DAILY WEATHER REPORT: கடந்த 24 மணி நேரத்தில், தமிழக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை. எனினும், சற்று குறைந்துள்ளது. அதேசமயம், சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் பதிவாகியுள்ளது.
சென்னை, டிசம்பர் 20: தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. அதேசமயம், தமிழகத்தின் அநேக பகுதிகளில் அதிகாலை வேளை, இரவு நேரங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் வடக்கில் இருந்து வரும் குளிர் காற்று அதிகரிப்பதால், தமிழகத்தில் இன்றைய வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் முன்னறிவித்துள்ளது.
இதையும் படிக்க : மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!
வானிலை மையம் சொல்வது என்ன?
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடமாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் குளிர் காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அதிகாலை வேளையில், இன்று பனி மூட்டம் அதிகரிக்க வாய்புள்ளது. இதனால், சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை குறையலாம்.




2-4 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்பு:
கடந்த 24 மணி நேரத்தில், தமிழக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை. எனினும், சற்று குறைந்துள்ளது. அதேசமயம், சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், மற்ற தமிழக, புதுச்சேரி பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. இன்று நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்:
அதிகபட்ச வெப்பநிலையாக கரூரில் 32.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை (சாதாரணத்தை விட அதிகம்) நாமக்கல்லில் 16.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் 2 முதல் 4 செல்சியஸ் வரை வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், திருப்பத்தூரில் மட்டும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட குறைந்து பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!
சென்னை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.