Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் ரூ.1,000 உதவித்தொகை – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Talent Search Exam: தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி கனவை நிறைவேற்றும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாணவர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் ரூ.1,000 உதவித்தொகை – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Dec 2025 19:32 PM IST

சென்னை, டிசம்பர் 19: தமிழ்நாடு அரசுப் பள்ளி (Government School) மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நிறைவேற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியமான கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு (TNCMTSE) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெறும் வரை தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

இந்த 2025–2026 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதல்வர் திறனாய்வு தேர்வு,  வருகிற ஜனவரி 31, 2026 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வை, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் இந்த தேர்வை எழுதலாம்.  இந்த தேர்வு மூலம், 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் என தமிழ்நாடு முழுவதும் இருந்து மொத்தம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!

இந்த தேர்வில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். அதாவது, 10 மாதங்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் இந்த தொகை வழங்கப்படும். முக்கியமாக, இந்த உதவித்தொகை பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரியில் சேர்ந்து, இளங்கலை பட்டம் பெறும் வரை தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த தேர்வு இரண்டு விதமாக நடைபெறும்.  தமிழ்நாடு அரசு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 2 நாட்களாக நடைபெறும் இந்த தேர்வில், முதல் நாள் கணித பாடத்தில் இருந்து 60 கேள்விகள் இடம்பெறும். இந்த  தேர்வான காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 12 மணி வரை நடைபெறும்.  இரண்டாம் தாள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து 60 கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2 மணி நேரம் நடைபெறும்.

இதையும் படிக்க : மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை www.dgetn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50 செலுத்தி, டிசம்பர் 28, 2025 அன்று மாலைக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்வை எழுத மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

உயர்கல்விக்கான செலவுகளை குறைத்து, மாணவரகளின் கல்விக்கு பொருளாதார ரீதியான தடை ஏற்படாமல் இருக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மாணவர்களின் நிதி சுமையை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.