Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!

டெல், ஏசர், எச்.பி. நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மடிக்கணினிகள் கொள்முதல் செய்து மாவட்டங்களுக்கு அனுப்பி, கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அதன்படி, 2026 ஜனவரி 5ஆம் தேதி முதல் லேப்டாப் விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது.

மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா..  உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Dec 2025 08:46 AM IST

சென்னை, டிசம்பர் 19: கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும், 10 லட்சம் மாணவர்களுக்கு பிப்ரவரிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் மடிக்கணினி கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் இந்த திட்டத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம் என்று சாடியுள்ளார்.

இதையும் படிக்க : சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலை…சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி…இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!

இபிஎஸ்-ஆல் தடுக்க முடியாது:

மேலும், தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேற விடக் கூடாது என்ற பாஜனாவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கத் தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கான லேப்டாப்:

2025–2026 நிதிநிலை அறிக்கையிலேயே, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் செயற்கை நுண்ணறிவு வசதிகள், அதிவேக செயலி, நீண்டநேர பேட்டரி போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். அதோடு, அமெரிக்க AI நிறுவனத்துடன் இணைந்து, 6 மாதங்களுக்கு இலவச AI வசதியும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : பள்ளி மாணவன் கண்டெடுத்த அதிசய நாணயம்..1000 ஆண்டுகள் பழமை..ராமநாதபுரத்தில் ஆச்சரியம்!

பிப்ரவரிக்குள் 10 லட்சம் லேப்டாப்:

டெல், ஏசர், எச்.பி. நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மடிக்கணினிகள் கொள்முதல் செய்து, மாவட்டங்களுக்கு அனுப்பி, கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதோடு, இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ கதைகளைச் சொல்லி வருவதாகவும், இத்திட்டத்தை தடுக்க முடியுமா என்று நினைக்கும் அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.