சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதையொட்டி, தனது படங்களில் வசனங்களையும் அதற்கு ஏற்றாற்போல், வைத்து நடித்து வந்தார். அரசியலில் நுழைந்து தன்னை வாழ வைத்த மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எனினும், தனிப்பட்ட காரணங்களால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கிய அவர், அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார்.