பீகார் மாநிலத்தில், பொதுவிநியோகத் திட்டத்தில் புதிய தொழில்நுட்ப மாற்றமாக, தானிய ஏடிஎம் எனப்படும் இயந்திரங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. மத்திய அரசின் பைலட் திட்டத்தின் கீழ், பாட்னா நகரில் முதற்கட்டமாக மூன்று ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளதாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் முதல் தானிய ஏடிஎம், கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒடிசாவின் புவனேஸ்வரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.