பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில், பிரியதர்ஷனுக்கு அவரது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அரிய பழைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது. குறிப்பாக, புகைப்படத்தை பகிர்ந்த மோகன்லால், ‘டியர்’ என்றும் பிரியதர்ஷனை பிரியமுடன் குறிப்பிட்டிருந்தார்.