AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!

IndiGo Airlines ATR Small Aircraft Service : சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே சிறிய ரக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!
சென்னை டூ திருச்சி,மதுரை இடையே சிறிய ரக விமான சேவை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 04 Feb 2026 07:49 AM IST

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏ. டி. ஆர். வகையான (போக்குவரத்து மண்டல விமானங்கள்) சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சிக்கு 6 சிறிய ரக விமானங்களும், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு 6 சிறிய ரக விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதே போல, சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு சுமார் 8 விமானங்களும், மறுமார்க்கமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு 8 விமானங்களும் என மொத்தம் 16 சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு இயக்கப்பட்ட ஏ. டி. ஆர். வகையிலான சிறிய ரக விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் திடீரென ரத்து செய்தது.

சிறிய ரக விமானம் ரத்து- பெரிய ரக விமானங்கள் இயக்கம்

இதற்கு ஈடாக A20N என்ற பெரிய அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்களில் ஒரே நேரத்தில் 180 முதல் 184 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கும் தலா 2 விமானங்கள் இயக்கப்பட்டன. இதே போல, சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு 8 விமானங்களும், மறு மார்க்கமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 8 விமானங்களை என மொத்தம் 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: சென்னையில் பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு – என்ன நடந்தது?

கூடுதலாக ஒரு சிறிய ரக விமானம் இயக்கம்

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு காலை 9:10 மணிக்கும், மாலை 4:30 மணிக்கு 2 பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மதியம் 1:35 மணிக்கு மேலும் ஒரு சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. இதனால், சென்னை விமான நிலையம் முதல் திருச்சி விமான நிலையம் இடையிலான விமான சேவை 6- ஆக உயர்ந்துள்ளது.

விமான பயணிகள் மத்தியில் எழுந்த கோரிக்கை

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை முதல் திருச்சி, மதுரைக்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இதனால், விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விமான சேவையை தொடங்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் 3 விமான நிலையங்கள் இடையே சிறிய விமான சேவை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நாளை இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Follow Us