மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பு… அரசு ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்
Coimbatore Tragedy : கோயம்புத்தூரில் அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகள் என குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர், பிப்ரவரி 2 : கோயம்புத்தூரில் (Coimbatore) அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகள் என குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் அருகே பெரியநாயக்கன்பாளையம் அருகே சாந்திமேடு தம்பு நகர் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ். இவர் தமிழ்நாடு மின்சாரத்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இலக்கியா செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் கமலேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட அரசு அலுவலர்
இந்த நிலையில் பிப்ரவரி 2, 2026 அன்று வீட்டில் கணவன், மனைவி, மகள் மூவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையில் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : மாம்பழம் சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு




ஆரம்பகட்ட விசாரணையில் கமலேஷின் மனைவி இலக்கிய கடந்த 2 ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நோய் தீவிரமடைந்ததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர்களது குடும்பத்தினர் மிகவும் மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. இது அவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் தற்கொலைக்கு முன் கமலேஷ் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் தனது மனைவி மார்பக புற்றுநோயால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். சிகிச்சையளித்தும் பலனில்லை என்றும் இதனால் குடும்பத்துடன் இந்த முடிவெடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது சேமிப்புத்தொகையை சிஎஸ்ஐ தேவாலயத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தைப்பூசத் திருவிழாவில் நடந்த சோகம்.. தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக்ததை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே அவர்களது மரணத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)