AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக தனிக்கட்சி அல்ல…அது பாஜகவின் கிளை…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

Chief Minister MK Stalin: தமிழகத்தில் அதிமுக தனிக் கட்சி அல்ல என்றும் அது பாரதீய ஜனதா கட்சியின் கிளையாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிமுக தனிக்கட்சி அல்ல…அது பாஜகவின் கிளை…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
பாஜகவின் கிளையாக செயல்படும் அதிமுக
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 01 Feb 2026 21:35 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் இலக்கு ஒன்றாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது ஒற்றை இலக்காகும். இதனால் தான் திராவிட இயக்க கொடிகளில் சிவப்பு நிறம் உள்ளது. நமது கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும் நமது பொது இலக்கு சமத்துவ சமுதாயமாகும். நமது தோழமை தான் பாசிசத்தை ஒழிக்கும், வீழ்த்தும். நமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள் நமது ஒற்றுமையை சிதைக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களுடைய எண்ணங்கள் தான் சிதைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் கோட்பாடுகளை பாசிச பாஜக சிதைத்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது.

தேஜ கூட்டணிக்கும்- ஜனநாயக சக்திக்களுக்குமான தேர்தல்

மாநிலங்களின் வளத்தை சூறையாடி ஒன்றியத்தில் குவித்து வருகின்றனர். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. பரந்து விரிந்திருந்த நமது இந்தியா தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் உள்ள ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து இண்டியா கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலானது ஜனநாயக சக்திகளுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நடைபெறுகிற தேர்தலாகும்.

மேலும் படிக்க: தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழா..பனையூரில் பிரம்மாண்டமாக நடக்கிறது…விஜய் கொடியேற்றுகிறார்!

பாஜகவின் கிளையாக செயல்படும் அதிமுக

அதிமுக என்பது தனி கட்சி கிடையாது. அது பாஜகவின் தனி கிளையாகும். மகாத்மா காந்தியின் பெயரை அழித்த 100 நாள் வேலைத் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்பதால், இந்த பட்ஜெட்டிலும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. பாஜகவின் டபுள் என்ஜின் என்பதை டப்பா எஞ்சின் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை

போதைப் பொருள் புழக்கம், வன்முறை, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகியவற்றில் அதிகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாட்டுக்கு முன்னோடியான திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அதிகளவு வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றி உள்ளது. கருத்துக் கணிப்புகள் நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் மக்களோடு இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களை சொந்த பணிக்கு பயன்படுத்த தடை..புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!

Follow Us