AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!

Pongal Gift Set: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு விநியோகிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை சுமார் 6 லட்சம் பேர் பெற வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.3 ஆயிரம் ரொக்கம்..பெற விரும்பாத 6 லட்சம் பேர்..என்ன காரணம்!
பொங்கல் பரிசு தொகுப்பு பெற விரும்பாத 6 லட்சம் பேர்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 01 Feb 2026 17:51 PM IST

தமிழகத்தில் கடந்த ஜனவரி 15- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக, தமிழகத்தில் உள்ள 2.91 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இதற்கான டோக்கன்கள் தயார் செய்யப்பட்டு
இதற்காக கடந்த ஜனவரி 4- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலந்தூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் மற்றும் ரூ. 3000 ரொக்க பணத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.7,604.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

6 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பு- ரொக்க பணத்தை பெறவில்லை

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலர் பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றதால் தொய்வு ஏற்பட்டது. இதனால், பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர், கடந்த ஜனவரி 19- ஆம் தேதி முதல் பொங்கள் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை பெறாத நபர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அந்த கால அவகாசம் நேற்று ஜனவரி 31- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: மத்திய பட்ஜெட்…கவிதை நடையில் கண்டனத்தை பதிவு செய்த கமல்ஹாசன்!

ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு

பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றுக்கு ரூ.248.66 கோடி, வேட்டி மற்றும் சேலை வாங்குவதற்கு ரூ.668.12 கோடி மற்றும் ரூ.3000 ரொக்க பணத்துக்கு ரூ.6,687.51 கோடி என மொத்தம் 7.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்தது.

மக்கள் மத்தியில் வியப்பு

அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு ரொக்க பணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனிடையே, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாகவும் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை பெறாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சிகிச்சையில் ஹெச்.ராஜா..நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…பாஜக-திமுகவினர் நெகிழ்ச்சி!

Follow Us