AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொதிகை மலையில் மலையேற்றம், பழவேற்காட்டில் காட்சி மையம்.. தமிழகத்திற்கு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!

Pazhaverkadu Viewpoint: இந்தியாவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் தலங்களான ஆதிச்சநல்லூர் உள்பட 60 இடங்கள் கலாசார மையம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பழவேற்காட்டு ஏரியில் உலகத்தரத்தில் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பொதிகை மலையில் மலையேற்றம், பழவேற்காட்டில் காட்சி மையம்.. தமிழகத்திற்கு பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!
தமிழகத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 01 Feb 2026 12:22 PM IST

மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள் . அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். பல்வேறு நோய்களுக்கன மருந்துகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றார்.

தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம்:

இந்தியாவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் தலங்களான ஆதிச்சநல்லூர் உள்பட 60 இடங்கள் கலாசார மையம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொதிகை மலையேற்ற சுற்றுலா:

இந்தியாவில் மலையேற்ற சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பறவைகளை காணும் சுற்றுலா திட்டம்:

தமிழ்நாட்டின் பழவேற்காட்டு ஏரியில் உலகத்தரத்தில் பறவைகளை காண்பதற்கான பிரத்யேக காட்சி மையம் அமைக்கப்படும். அந்தவகையில், அங்கு பறவகைளை கண்காணிக்க 3 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Follow Us